தேடுதல்

இலங்கை அதிபருடன் பேராயர் காலகர் இலங்கை அதிபருடன் பேராயர் காலகர்  

இலங்கையில் யூபிலி விழாவில் பங்கேற்கும் பேராயர் காலகர்

தனது இந்தப் பயணத்தின்போது பேராயர் காலகர் அவர்கள், இலங்கை அரசுத் தலைவர் அனுர குமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற அரசு மற்றும் மதத் தலைவர்களைச் சந்திக்கிறார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் 

திருப்பீடத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் நவம்பர் 3 முதல் 8 வரை அந்நாட்டுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

பேராயர் காலகர் அவர்களின் இந்தப் பயணம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் அமைதியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் இது குறித்த செய்திக் குறிப்பில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பயணத்தின்போது ​​பேராயர் காலகர் அவர்கள், இலங்கை அரசுத் தலைவர் அனுர குமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற அரசு மற்றும் மதத் தலைவர்களைச் சந்திப்பார் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, உயிர்ப்பு ஞாயிறன்று, வெடிகுண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களுக்கும் வருகை தருவார் என்றும், கொழும்பில் உள்ள புனித லூசியா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தும் அதேவேளை, அந்நாட்டு இலங்கை ஆயர் பேரவை உறுப்பினர்களைச் சந்திப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது பயணத்திட்டத்தில் கண்டியில் உள்ள பௌத்தத் தலைவர்களுடனான பல்சமய சந்திப்புகளும், இலங்கை அன்னையின் தேசிய குருமடத்திற்கான பயணமும் அடங்கும் என்றும், அங்கு அவர் குருமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சந்திப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 நவம்பர் 2025, 15:47