தேடுதல்

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள திருஅவையின் கையேடு

இந்த இணையதளத்தை, சந்தா மூலம், annuariopontificio.catholic என்ற இணைய முகவரியிலும் அல்லது தனியான iOS மற்றும் Android செயலிகள் மூலமாகவும் அணுகலாம்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

டிசம்பர் 8, திங்கள்கிழமை முதல் இணைய உலாவி மற்றும் கைபேசி செயலி மூலம் அணுகக்கூடிய திருஅவையின் ஆண்டுக் கையேட்டின் முழுமையான எண்மமுறை (டிஜிட்டல்) பதிப்பை திருப்பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கையேடு, உரோமைத் தலைமைச் செயலகம் , மறைமாவட்டங்கள், துறவற சபைகளின் நிறுவனங்கள், மற்றும் திருப்பீடத் தூதரகங்கள் குறித்த புதிய தகவல்களை அளிக்கிறது.

உரோமைத் தலைமைச் செயலகம் மற்றும் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை இணைந்து இந்தச் செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளன. மேலும் இச்செயல் திட்டம் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவரே முதன்முதலில் இணையத்தில் புகுபதிகை (login) செய்துள்ளார்.

இந்தக் கையேடு சான்றளிக்கப்பட்ட, தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட தரவு மற்றும் மேம்பட்ட தேடல் செயல்பாடுகளை வழங்கும் நீண்டகால ஆதாரக் கருவியை (reference tool) நவீனப்படுத்துகிறது.

இது உரோமைத் தலைமைச் செயலகத்தின் பல்வேறு துறைகள், திருப்பீடத் தூதரகங்கள், ஆயர் பேரவைகள், கல்வி நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்தத் தளத்தை, சந்தா மூலம், annuariopontificio.catholic என்ற இணைய முகவரியிலும் அல்லது தனியான iOS மற்றும் Android செயலிகள் மூலமாகவும் அணுகலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 டிசம்பர் 2025, 15:40