வத்திக்கான் செய்திகளை உடனுக்குடன் பெற புதிய டிஜிட்டல் வசதி
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை கடந்த பிப்ரவரி மாதம் video widget எனப்படும் கணினி அல்லது திறன் பேசிகளின் முகப்புத் திரையில் நேரடி காணொளித் தகவல்களைக் காட்டும் சிறிய மென்பொருள் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஏற்கனவே உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இணையதளங்களில் இணைக்கப்பட்டுள்ளது.
நற்செய்தி அறிவிப்பிற்கான இந்த புதிய கருவியின் மூலம், ஏப்ரல் 13 முதல் 23 வரை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்காவிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் தொடர்பான உரைகள், ஒலிகள், படங்கள் , காணொளிகள் ஆகிய அனைத்து விதமான உள்ளடக்கங்களையும் நேரடியாகவும் எளிதாகவும் பெற முடியும்.
இதில் செய்திகள், காணொளிகள் மற்றும் திருத்தந்தை பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்த நேரடி வர்ணனைகள் இடம்பெறுவதுடன், நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களையும் மக்கள் பெற முடியும்.
கத்தோலிக்க பங்குத்தளங்கள் மற்றும் மறைமாவட்ட இணையதள வடிவமைப்பாளர்களுக்கு (Webmasters) உரையாற்றிய வத்திக்கான் ஊடகங்களின் தலையங்க இயக்குநர் டாக்டர் டோர்னெல்லி அவர்கள், திருத்தந்தை உங்கள் நாட்டிற்கு வருகை தருவதற்கு முன்னதாக, இந்த புதிய தொழில்நுட்பக் கருவியை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் மூலம், அனைத்து இணையதளங்கள் மற்றும் திருஅவை தொடர்பான செய்திச் சேவைகள் திருத்தந்தையின் வருகையை நேரடி ஒளிபரப்பாகவும் , வத்திக்கான் செய்திகளின் உடனுக்குடனான தகவல்களையும் நீங்கள் விரும்பும் மொழியில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்