தேடுதல்

தூதர்கள் பேராயர் பாவ்லோ ருடெல்லி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது தூதர்கள் பேராயர் பாவ்லோ ருடெல்லி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது 

திருப்பீடத் தூதர்களுக்கு உயரிய கௌரவங்கள்!

திருப்பீடத்திற்கான தூதர்களாக நியமிக்கப்பட்டு, தங்களது பதவிக்காலத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 13 தூதர்களுக்கு, வத்திக்கானில் பாரம்பரிய உயரிய கௌரவங்கள் வழங்கப்பட்டன.

ஜான்சிராணி  அருளாந்து -‌ வத்திக்கான்

மே 12 , செவ்வாயன்று, திருப்பீடத்திற்கான (Holy See) தூதர்களாக நியமிக்கப்பட்டு, தங்களது பணியில் குறைந்தது இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தூதர்கள் குழுவினருக்கு, திருப்பீடத்தின் பாரம்பரிய கௌரவங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்,  திருத்தந்தையாக  பொறுப்பேற்றதன் ஆண்டு நிறைவு நாளில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பீட அரசு செயலகத்தின் பொது விவகாரங்களுக்கான துறைத் தலைவர் பேராயர் பாவ்லோ ருடெல்லி அவர்கள், 13 தூதரகப் பிரதிநிதிகளுக்கு கௌரவச் சின்னங்களையும் அதிகாரப்பூர்வ சான்றிதழ்களையும் வழங்கினார்.

அந்தத் தூதர்களுக்கு, தூதரகப் பணிக்காக திருப்பீடம் வழங்கும் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான "ஒன்பதாம் பயஸ் சபையின் மாண்புமிகு நற்பிரபு" (Knight or Dame Grand Cross of the Order of Pius IX) என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 மே 2026, 12:53