தேடுதல்

மணிப்பூர் அமைதிக்காக போராடும் மக்கள் மணிப்பூர் அமைதிக்காக போராடும் மக்கள்   (AFP or licensors)

மணிப்பூர் வன்முறைக்கு இந்திய அரசியல் தலைவர்கள் கண்டனம்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையே கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய மோதல் ஏறக்குறைய 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையின் உச்சமாக பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட காணொளி இந்தியா முழுதும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

“மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறை வெறிச்செயல் மனிதாபிமானமற்றது என்றும், குற்றவாளிகள் தப்பிக்க முடியாதவாறு விசாரணை நடத்த முயற்சித்து வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.

மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில் “மணிப்பூரில் மனிதம் மாண்டுவிட்டது ஜனநாயகத்தையும், சட்டத்தையும் வன்முறை வெறிச்செயலாக அரசு மாற்றி உள்ளது என்றும் கண்டித்துள்ளார்.

அரசியல் தலைவர்களின் அமைதி மற்றும் செயலற்றத் தன்மைதான் மணிப்பூரை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்றும், மணிப்பூர் மக்களுடன் ஒன்றிணைந்து நின்று அமைதி ஒன்றை மட்டுமே முன்னோக்கிச் செல்லும் வழியாகக் கொண்டு செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையே கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய மோதல் ஏறக்குறைய 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2023, 14:16