தேடுதல்

காங்கோவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி காங்கோவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி   (ANSA)

குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்தை பாதிக்கும் கோவிட் பெருந்தொற்று

சூடானில் மோதல் அதிகரித்து வருவதால் 50 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான ஆபத்தில் உள்ளனர் : யுனிசெப் அறிக்கை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலக நல அமைப்பு மற்றும் யுனிசெப் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 2022-ஆம் ஆண்டு குழந்தைகளிடையே நோய்த்தடுப்பு விகிதங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளன என்றும், இது தொற்றுநோய் காரணமாகத் தடுப்பூசி எடுப்பதில் குறிப்பிடத்தக்க குறைப்பை பதிவு செய்துள்ளது என்றும் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள உலக நல அமைப்பின் தலைமை இயக்குநர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள், நோய்த்தடுப்பூசிப் போட்டுக்கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கைத் தனக்குத் திருப்தியை அளிக்கின்றது என்றும், தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாத குழந்தைகளின் தொடர் சரிவுக்குப் பிறகு உயிர்காக்கும் நோய்த்தடுப்புப் பணிகளை மீட்டெடுப்பதில் மிகவும் கடினமாக உழைத்தவர்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

இந்த நோய்த்தடுப்பு வசதிகளைப்  பெறுவதில் உள்ள இடைவெளிகளை அதிகமான நாடுகள் அகற்றாதவரை நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளும் மற்றும் இறக்கும் குழந்தைகளும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்று UNICEF நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Catherine Russell அவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2023, 13:34