தேடுதல்

 புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்ந்தோர்  

புலம்பெயர்ந்தோர் நிலை குறித்த NACCOM-இன் ஆய்வறிக்கை

இங்கிலாந்து அரசின் சட்டவிரோதக் குடியேற்ற மசோதா நிறைவேற்றப்பட்டால், இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடற்ற நிலை மற்றும் வறுமையை எதிர்கொள்வார்கள் : NACCOM-இன் ஆய்வறிக்கை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜூலை 17, திங்களன்று, வெளியிடப்பட்ட NACCOM என்ற அமைப்பின் புதிய ஆய்வரிக்கையானது, இங்கிலாந்து அரசில் தஞ்சம் கோர மறுக்கப்பட்டவர்கள், பல சூழ்நிலைகளில் அநியாயமாக, அவர்களின் புகலிடக் கோரிக்கையில் ஏற்படும் எதிர்மறையான முடிவைத் தொடர்ந்து, வறுமை, வீடற்ற தன்மை மற்றும் உடல் மற்றும் மன நலம்  குறைதல் உள்ளிட்ட கடுமையான துயரங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சமூக ஆராய்ச்சியாளர் நிக்கோ அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் வாழ்க்கையை பாதிக்கும் கொள்கைகள் உருவாக்கப்படும்போது, ​​வாழ்ந்து அனுபவமுள்ளவர்களாகிய நமது குரல்கள் கேட்கப்படுவதும், கருத்தில் கொள்ளப்படுவதும் இன்றியமையாதது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த ஆராய்ச்சி வாழ்ந்து அனுபவமுள்ளவர்களின் குரல்களைக் கேட்கச் செய்கின்றது என்றும் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட அமைப்பில் மாற்றத்திற்கான அவசரத் தேவையை நிரூபிக்கிறது என்றும் கூறியுள்ளார் நிக்கோ.

இங்கிலாந்து அரசின் சட்டவிரோதக் குடியேற்ற மசோதா நிறைவேற்றப்பட்டால், இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடற்ற நிலை மற்றும் வறுமையை எதிர்கொள்வார்கள் என்று எண்ணும் இந்நேரத்தில் இந்த அறிக்கை வந்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2023, 14:12