தேடுதல்

வெப்பக் காற்றின் பாதிப்பு வெப்பக் காற்றின் பாதிப்பு   (2023 Getty Images)

2050-இல் 220 கோடி குழந்தைகள் வெப்பக் காற்றால் பாதிக்கப்படுவர்

2020-ஆம் ஆண்டில் இத்தாலியில் 61 இலட்சம் சிறார்கள் அதிக அதிர்வெண் கொண்ட வெப்பக் காற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது 2050- ஆம் ஆண்டில் 97 இலட்சமாக உயரும்: யுனிசெப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2050-ஆம் ஆண்டிற்குள் உலகிலுள்ள 220 கோடி குழந்தைகளும் அதிக அதிர்வெண் கொண்ட வெப்பக் காற்றுக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது யுனிசெப் நிறுவனம்.

காலநிலை நெருக்கடியால் தற்போது 55 கோடியே 90 இலட்சம் குழந்தைகள் அதிக அதிர்வெண் கொண்ட வெப்பக் காற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று எடுத்துக்காட்டும் அந்நிறுவனம், ஏற்கனவே, 3 குழந்தைகளில் ஒருவர் மிக அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் நாடுகளில் வாழ்கின்றார் என்றும், 4 குழந்தைகளில் ஒருவர் அதிக அதிர்வெண் கொண்ட வெப்பக் காற்றுக்கு ஆளாகின்றார் என்றும் கூறுகிறது.

அதிக வெப்பக் காற்றின் காலம் தற்போது உலகளவில் 53 கோடியே 80 இலட்சம் (23%) குழந்தைகளைப் பாதிப்படையச் செய்கிறது என்றும், இந்த எண்ணிக்கை 2050-இல் 160 கோடியாக உயரும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரிக்கும் அந்நிறுவனம், இந்நிலை புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தவும் உயிர்களைப் பாதுகாக்கவும் அவசர மற்றும் கடுமையான உமிழ்வுத் தணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.

புவி வெப்பமடைதலின் அளவைப் பொறுத்து, இலட்சக்கணக்கான குழந்தைகள் வெப்பக் காற்று மற்றும் தீவிர வெப்பநிலைக்கு ஆளாக நேரிடும் என்றும், வடக்குப் பகுதிகளில் உள்ள குழந்தைகள், குறிப்பாக ஐரோப்பாவில், அதிக தீவிரம் கொண்ட வெப்பக் காற்றால் மிகப்பெரிய பாதிப்புகளை அனுபவிப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டும் இந்நிறுவனம், 2050-ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள குழந்தைகளில் ஏறக்குறைய பாதி பேர் அதிக வெப்பநிலைக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2023, 14:05