தேடுதல்

மொரோக்கோ சிறார் மொரோக்கோ சிறார்  (ANSA)

உலக அளவில் பள்ளி செல்லாத சிறாரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பெருமளவில் கல்வியில் இருந்து விலக்கப்பட்டதும் இந்த எண்ணிக்கை உயர்விற்குக் காரணம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இலட்சக் கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் மாநிலங்கள் கைகளில் உள்ளது. எனவே அதற்காக அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் யுனினெஸ்கோவின் இயக்குனர்  ஆட்ரி அசோலே.

செப்டம்பர் 18 திங்கள் கிழமை வெளியிடப்பட்ட உயுனெஸ்கோவின் புதிய தகவலின்படி, 2021 முதல் பள்ளி செல்லாத சிறார் மற்றும் இளையோரின் எண்ணிக்கை 60 இலட்சமாக  உயர்ந்துள்ளது என்றும், இந்த முடிவு கல்விக்கான ஐக்கிய நாடுகளின் இலக்குகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளது.

கல்வி அவசர நிலையில் உள்ளது. அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்ய கடந்த பத்தாண்டுகளாக அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், யுனெஸ்கோவின் தரவுகள் தற்போது பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நிரூபிக்கிறது. இலட்சக் கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மாநிலங்கள் அவசரமாக மறுசீரமைக்க வேண்டும், ”என்று வலியுறுத்தியுள்ளார் யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் கூறினார்.

உலக அளவில் பள்ளி செல்லாத சிறாரின் எண்ணிக்கை 60 இலட்சமாக உயர்ந்துள்ளதாக வெளியிடப்பட்ட யுனெஸ்கோவின் புதிய புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டிலிருந்து பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்த அதிகரிப்புக்கான காரணம், ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பெருமளவில் கல்வியில் இருந்து விலக்கப்பட்டது என்றும், உலகெங்கிலும் உள்ள கல்வி முன்னேற்றத்தில் தொடர்ந்து தேக்க நிலை நிலவுவது என்றும் எடுத்துரைத்துள்ளது அத்தரவு.

2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தரமான கல்வி என்ற இலக்கை அமைக்கும் ஐ.நா. வின் நிலையான வளர்ச்சி இலக்கு 4 ஐ இந்த முடிவு குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும், ஒவ்வொரு 2 வினாடிகளுக்கும் ஒரு புதிய குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்," என்றும் அசோலே விளக்கியுள்ளார்.

நாடுகள் தங்கள் இலக்குகளை அடைய, 2030 வரை ஒவ்வொரு ஆண்டும் 14 இலட்சம் குழந்தைகள் சிறார் பருவக் கல்வியில் சேர வேண்டும் என்றும், முதன்மை நிறைவு விகிதங்களில் முன்னேற்றம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2023, 14:13