தேடுதல்

புலம்பெயர்ந்தோர் லாம்பதுசா கடற்கரையில் புலம்பெயர்ந்தோர் லாம்பதுசா கடற்கரையில்  

புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்

இந்த ஆண்டு 11,600க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறார் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் மொத்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இளம் சிறாரின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

லாம்பதுசா துறைமுகத்தை அடைவதற்குள் நீருக்குள் மூழ்கி 5 மாத குழந்தை மரணம் அடைந்ததைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என்றும், இந்தத் துயரங்கள் உயிரிழப்பை மட்டுமல்ல மாறாக மத்தியதரைக் கடலில் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்புப்பணி முறையை செயல்படுத்துவதை நினைவுபடுத்துகிறது என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

செப்டம்பர் 13 புதனன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பு இந்த செயல்முறைகள் அனைத்தும் தேசிய மற்றும் ஐரோப்பிய அளவில் எல்லாரும் இணைந்து செயலாற்றும் பொறுப்பின் அவசரத்தையும் வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு 11,600க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறார் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் மொத்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இளம் சிறாரின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பு, புலம்பெயர்ந்தோரின் பயணங்களை நிர்வகிப்பதில் ஒற்றுமைக்கான ஐரோப்பிய உறுதிப்பாட்டின் அவசியத்தையும், இத்தாலியில் ஆதரவற்ற சிறார்களுக்கான வரவேற்பு முறையை வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளது.

சில சிறார் தங்களது குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு மத்தியதரைக் கடலின் மறுபக்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காகக் கடலைக் கடக்கும் போது, தெரிந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவதால் கூடுதல் ஆபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார் Save the Children அமைப்பின் இத்தாலி-ஐரோப்பா திட்ட இயக்குனர் ரஃபேலா மிலானோ.

"போர், வன்முறை, தீவிர வறுமை ஆகியவற்றிலிருந்து தப்பியோடிய அனைவரையும் மீட்பதற்கும் வரவேற்பதற்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்றும், புகலிடம் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பேச்சுவார்த்தைகளில் புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு மற்றும் மரியாதையை முக்கியமாக வைக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் ரபேலோ.

சிறார் உரிமைகள் குறித்த உடன்படிக்கை, குடும்ப மறுஒருங்கிணைப்பை விரைவுபடுத்துதல் மற்றும் எளிமைப்படுத்துதல், ஐரோப்பாவில் பாதுகாப்பைப் பெறுவதற்கான சட்ட வழிகளை வலுப்படுத்துதல், கட்டாய இடமாற்ற வழிமுறைகளை வழங்குதல் போன்றவை அனைத்தும் தேவையானவை என்றும் வலியுறுத்தியுள்ளார் ரபேலோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2023, 12:45