தேடுதல்

லாம்பதுசா புலம்பெயர்ந்தோர் லாம்பதுசா புலம்பெயர்ந்தோர்   (ANSA)

அதிகரிக்கும் லாம்பதுசா புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை

லாம்பதுசா தீவிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையானது மீட்புப்பணியினர் மற்றும் வரவேற்கும் அமைப்புகளுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது

மெரினா ராஜ் - வத்திக்கான்

இடம்பெயர்தல் காரணமாக கடல்வழியாக பயணிக்கும் மக்கள் குறிப்பாக சிறார் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அசாதாரணமான வானிலை மாற்றங்களால் ஏற்படும் இத்தகைய பயணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உதவிகள் மற்றும் உளவியல் ஆதரவுகள் தேவை என்றும் கூறியுள்ளார் Andrea Iacomini

செப்டம்பர் 25 திங்கள் கிழமை லாம்பதுசாவிற்கு புலம்பெயர்ந்துள்ள ஆதரவற்ற சிறார்களை சந்திப்பதற்காக மேற்கொண்ட பயணத்தின்போது இவ்வாறு கூறினார் இத்தாலியின் யுனிசெஃப் செய்தித்தொடர்பாளர் Andrea Iacomini.

அண்மைய வாரங்களில் கடல் வழியாக வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காண முடிகின்றது என்று கூறிய Andrea, மக்கள் குறிப்பாக சிறார் இத்தகைய பயணத்தால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு உடனடி உதவி மற்றும் அடிப்படைத் தேவைகளோடு உளவியல் ஆதரவும் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

லாம்பதுசா தீவிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையானது மீட்புப்பணியினர் மற்றும் வரவேற்கும் அமைப்புகளுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ள அந்திரேயா, பெண்கள், சிறார், இளையோர், குடும்பங்கள் என கடல் வழியாக வருபவர்களின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசின் கூடுதல் முயற்சிகளின் அவசியத்தை நிரூபித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

செப்டம்பர் 23 திங்கள் கிழமை தொடங்கி 28 வியாழன் வரை லாம்பதுசா புலம்பெயர்ந்த சிறார் மற்றும் மக்களுக்கான நிவாரணப் பணிகளில்  ஈடுபட உள்ளார் இத்தாலியின் யுனிசெஃப் இயக்குனர்  செய்தித்தொடர்பாளர் Andrea Iacomini.

 

25 September 2023, 12:53