தேடுதல்

கடலில் வலை வீசும் மீனவர் கடலில் வலை வீசும் மீனவர் 

நேர்காணல் – தேசிய கடல்சார் தினம்

இந்தியாவில் தேசிய கடல் சார் வாரமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி வாரம் முதல் ஏப்ரல் 5 வரை சிறப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 5 ஆம் நாள் தேசிய கடல் சார் நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
நேர்காணல் – தேசிய கடல்சார் தினம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் வாழ்கின்ற இந்த பூமி பந்து 70 விழுக்காடு கடல் நீரால் ஆனது. நாம் வாழ்கின்ற நிலப்பரப்பை விட நீர்ப்பரப்பு தான் இப்பூமியில் அதிகம். மனிதர்களாகிய நாம் வாழ்வதற்குக் கடல் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றது என்று கூறினால்  மிகையாகாது. உலகில் இருக்கும் கண்டங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து வாணிகம் செய்யவும், பல நாடுகளுக்கு இடையேயானப் போக்குவரத்திற்கும் கடல் மிகவும் துணைபுரிகின்றது. கடல் பல இலட்சக் கணக்கான மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், ஆக்சிஜன் உயிர் வாயுவை உற்பத்தி செய்யவும், பல மருந்துகளுக்கான அடிப்படை மூலப்பொருட்கள் தயாரிக்கவும் காரணமாக அமைகின்றது. காலநிலை மாற்றத்தை சீரமைக்கவும், குறிப்பாகக் கடற்கரையோரம் வாழும் மீனவர்களின் மிகப்பெரிய வாழ்வாதாரமாகவும் கடல்  திகழ்கின்றது.   

இந்தியாவில் தேசிய கடல் சார் வாரமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி வாரம் முதல் ஏப்ரல் 5 வரை சிறப்பிக்கப்பட்டு ஏப்ரல் 5 ஆம் நாள் தேசிய கடல் சார் நாளாகக் கொண்டாடப்படுகின்றது. இன்றைய நாளில் தேசிய கடல்சார் தினம் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் திரு ஜோன்ஸ் ஸ்பார்ட்டகஸ். தூத்துக்குடியை சார்ந்த திரு ஜோன்ஸ் ஸ்பார்ட்டகஸ் அவர்கள், உலக மீனவ மக்கள் பேரவை உறுப்பினர். மீனவ சமூக ஆய்வாளராகத்திகழும் ஸ்பார்டகஸ் அவர்கள், கடல்சார் மக்களின் வாழ்வியல், வாழ்வாதாரம் மற்றும் வாழ்வுரிமைகளை நிலைநாட்டுவதற்கான ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். திரு ஜோன்ஸ் ஸ்பார்ட்டகஸ் அவர்களை தேசிய கடல்சார் தினம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2024, 09:02