தேடுதல்

உக்ரைன் குழந்தை உக்ரைன் குழந்தை   (AFP or licensors)

உக்ரைனில் நடந்த தாக்குதலில் 5 குழ்நதைகள் காயம்!

உக்ரைனில் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும், குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் : யுனிசெஃப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனிலுள்ள ஒடெசா மற்றும் கெர்சன் பகுதியில் ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று நடந்த தாக்குதலில் 5 குழந்தைகள் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

ஒடெசாவில் நிகழ்ந்த தாக்குதலில் காயமடைந்த 4 குழந்தைகளும், மிகவும் சிறியவர்கள் எனத் தெரிவிக்கும் அதன் அறிக்கை, கெர்சன் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில், இன்னொரு குழந்தை காயமடைந்ததுடன் மற்றும் பள்ளி ஒன்று சேதமடைந்ததாகவும் உரைக்கிறது.

இன்னும் எத்தனை காலம் குழந்தைகள் இந்தக் கொடுமையில் வாழ வேண்டும்? என்று கேள்வி ஒன்றை அவ்வறிக்கையில் எழுப்பியுள்ள யுனிசெஃப்  நிறுவனம், தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும். குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2024, 14:08