தேடுதல்

சிகிச்சைபெறும் ஹெய்ட்டி குழந்தைகள் சிகிச்சைபெறும் ஹெய்ட்டி குழந்தைகள்   (AFP or licensors)

ஹெய்ட்டியில் 1,80,000-க்கும் மேலான குழந்தைகள் உள்நாட்டில் இடம்பெயர்வு

ஹெய்ட்டியில் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 16 இலட்சம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 27 இலட்ச மக்கள் வாழ்கின்றனர் : யுனிசெஃப் தலைமை இயக்குனர் Catherine Russell

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஹெய்ட்டியில் 30 இலட்சம் குழந்தைகள் உட்பட 55 இலட்சம் மக்கள், அல்லது நாடுமுழுவதில் உள்ள 3 குழந்தைகளில் 2 பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.

ஹெய்ட்டியின் மனிதாபிமான நிலைமை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டின் போது யுனிசெஃப் தலைமை  இயக்குனர் Catherine Russell அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள வேளை, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது கடத்தப்பட்டுள்ளனர் மற்றும் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்றும் உரைக்கின்றது.

இன்று நான் யுனிசெஃப் நிறுவனத்தின் தலைமை இயக்குநராகவும், ஹெய்ட்டியில் உள்ள மனிதாபிமான நிலைமை குறித்த முதன்மை வழக்கறிஞராகவும், நிறுவனங்களுக்கு இடையேயான நிலைக்குழுவுக்காக பேசுகிறேன் என்று கூறிய Russell அவர்கள், ஹெய்ட்டியில் நிலவும் சூழல் பேரழிவு தருவதாகவும், நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பல பகுதிகளில், அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ள அதேவேளையில், மக்கள் உணவு மற்றும் குடிநீரை இழந்து தவிக்கின்றனர் என்றும், சில சமூகங்களில், வாழ்க்கை முன்னெப்போதையும் விட ஆபத்தானதாக இருக்கின்றது என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் Russell

ஒவ்வொரு நாளும், குழந்தைகள் காயமடைகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். சிலர் ஆயுதமேந்திய குழுக்களில் சேருகின்றனர் என்றும், அண்மைய யுனிசெஃப் நிறுவனத்தின் தரவுகளின் படி ஹெய்ட்டியில் 30 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரையிலான ஆயுதக் குழுக்களில் தற்போது குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் Russell

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2024, 14:02