தேடுதல்

நிலஅதிர்வு ஏற்பட்ட ஆப்கானிஸ்தான் பகுதி நிலஅதிர்வு ஏற்பட்ட ஆப்கானிஸ்தான் பகுதி   (AFP or licensors)

ஆப்கானிஸ்தான் நிலஅதிர்வால் 1,172 குழந்தைகள் இறப்பு

5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 2,63,000 குழந்தைகள் பெரிய ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலதிர்வால் ஏறக்குறைய 1,172 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும், மொத்த இறப்பு எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு.

செப்டம்பர் 12, வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பானது, 45 குழந்தைகள் தங்கள் குடும்பங்களை இழந்துள்ளனர் என்றும், 271 பேர் யாருமற்ற அனாதைகளாக  மாறி உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நிலஅதிர்வினால் இதுவரை 2,164 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 3,428க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஏறக்குறைய 6,700 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கடுமையாக சேதமடைந்துள்ளன என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் 2,63,000 குழந்தைகள் இன்னும் பெரிய ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார் ஆப்கானிஸ்தானில் உள்ள யுனிசெஃப் மண்டலப் பிரதிநிதி தாஜுதீன் ஓயேவாலே.

குழந்தைகள் அதிகரித்து வரும் கடுமையான நெருக்கடியின் சுமையைச் சுமந்து வருகின்றனர் என்றும், நாம் அவசரமாக மட்டுமல்லாமல், இந்தப் போக்கை உடனடியாக மாற்றியமைக்கும் உறுதிப்பாட்டுடனும் பதிலளிக்க வேண்டும். என்றும் வலியுறுத்தும் அவ்வறிக்கையானது, ஆகஸ்டு மாதம் 31 அன்று ஏற்பட்ட நில அதிர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைக் குறித்த தகவல்களையும் எடுத்துரைத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 செப்டம்பர் 2025, 16:21