தேடுதல்

காசா துயரம் காசா துயரம்   (AFP or licensors)

இங்கிலாந்தில் ‘பாலஸ்தீனம் 36’ புதிய திரைப்படம் வெளியீடு!

அடுத்த ஆண்டு அக்காடமி விருதுகளில் சிறந்த பன்னாட்டுத் திரைப்படத்திற்கான பாலஸ்தீனியப் படமாக 'பாலஸ்தீனம் 36' புதிய திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் அவநம்பிக்கையான நெருக்கடி தொடரும் வேளையில், இவ்வாரம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ என்ற ஒரு புதிய திரைப்படம், அந்தப் பகுதியின் வரலாற்றைப் பற்றிய சில நுண்ணறிவுகளை வழங்குகிறது என்று கூறியுள்ளது ICN எனப்படும் செய்தி நிறுவனம்.

அன்னேமேரி ஜாசிர் எழுதி இயக்கியுள்ள இந்தப் திரைப்படம் 1936-ஆம் ஆண்டு கட்டாய பாலஸ்தீனத்தில் நடைபெறுகிறது என்றும், அங்கு ஒருங்கிணைந்த பாலஸ்தீன எழுச்சியும் அதிகரித்து வரும் யூதக் குடியேற்றமும் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான மோதலை தீவிரப்படுத்துகின்றன என்பதையும் அச்செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹியாம் அப்பாஸ், ஜெர்மி ஐரன்ஸ், யாஸ்மின் அல் மாஸ்ரி மற்றும் பில்லி ஹவ்ல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன், 'பாலஸ்தீனம் 36' திரைப்படம் கடந்த மாதம் டொராண்டோ பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது 20 நிமிடப் பாராட்டைப் பெற்றது என்பதையும் அச்செய்தி எடுத்துக்காட்டியுள்ளது.

அடுத்த ஆண்டு அக்காடமி விருதுகளில் சிறந்த பன்னாட்டுத் திரைப்படத்திற்கான பாலஸ்தீனியப் படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றும்,  அக்டோபர் 31, வெள்ளிக்கிழமையன்று, ஐக்கிய அரசின் கர்சன் பிலிம் படத்தை வெளியிடுகிறது என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 அக்டோபர் 2025, 15:34