மெலிசா சூறாவளியால் 7,00,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மெலிசா சூறாவளி கரீபியனை கடுமையாகப் பாதித்துள்ளதுடன், ஜமைக்கா மற்றும் கியூபாவை நேரடியாகத் தாக்கியது என்றும், மேலும் ஹைட்டி மற்றும் தொமினிக்கன் குடியரசையும் பாதித்தது என்றும் யுனிசெஃப் நிறுவனம் தெரிவிக்கின்றது.
மேலும் வெள்ளம், புயல் அலைகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களால் 7,00,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் உணவு, தண்ணீர், உடல்நலம், நலவாழ்வு மற்றும் கல்வி கிடைப்பது தடைபட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்ய யுனிசெஃப் அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்றும், 3,80,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான உயிர்காக்கும் உதவிகளை ஆதரிக்க 386 கோடி ரூபாயை கோருவதாகவும் அந்நிறுவனம் மேலும் உரைக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்