தேடுதல்

விறகு சுமந்து செல்லும் குழந்தைகள் விறகு சுமந்து செல்லும் குழந்தைகள்   (AFP or licensors)

காலநிலை பேரழிவால் குழந்தைகள் தொடர்ந்து பாதிப்பு!

காலநிலை மாற்றம் என்பது குழந்தைகளின் உரிமைகள் குறித்த நெருக்கடி, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் உள்ள குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் எதிர்காலத்தை அளவுக்கு அதிகமாகப் பாதிக்கக்கூடியது : உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

கடந்த 30 ஆண்டுகளில் குழந்தைகளைக் காப்பாற்றும் விதமாக பல்வேரு உறுதிமொழிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 1,36,000 குழந்தைகள் காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்படுகின்றனர் என பிரேசிலின் பெலெம் நகரில் இடம்பெற்று வரும் COP30 எனப்படும் காலநிலை மாநாட்டில் கூறியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

காலநிலை மாற்றம் என்பது குழந்தைகளின் உரிமைகள் குறித்த நெருக்கடி என்றும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் உள்ள குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் எதிர்காலத்தை அளவுக்கு அதிகமாகப்  பாதிக்கக்கூடியது என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 1.5°C இலக்கை அடைய உமிழ்வுகளை குறைப்பது உள்ளிட்ட வலுவான காலநிலை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், குழந்தைகள் மையப்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் சேவைகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது அந்நிறுவனம்.

மேலும், எதிர்கால தலைமுறையினரைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை அவசியம் எனவும்  வலியுறுத்தியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 நவம்பர் 2025, 14:53