நைஜீரியாவின் மேற்குப் பகுதியில் மீண்டும் ஆள்கடத்தல்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
நவம்பர் 24, இத்திங்களன்று, ஏறத்தாழ 20 ஆயுதம் ஏந்திய நபர்கள் கொண்ட ஒரு கும்பல் நைஜீரியாவின் மேற்குப் பகுதியான குவாரா மாநிலத்தின் எகிட்டி உள்ளூர் அரசுப் பகுதியிலுள்ள இசாபா சமூகத்தைத் தாக்கியது என்றும், இத்தாக்குதலில், ஒரு கர்ப்பிணிப் பெண், 10 குழந்தைகள் மற்றும் இரண்டு தாய்ப்பாலூட்டும் அன்னையர்களும் கடத்தப்பட்டனர் என்றும் பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகளால் பல முறை சுட்டு, ஒரு வயதான பெண்ணுக்குக் காயமேற்படுத்திய இந்தக் கொள்ளையர்கள், அப்போது எருகுவில் உள்ள கிறிஸ்தவக் கோவில் ஒன்றில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இறைவேண்டலில் கலந்து கொண்ட 38 வழிபாட்டாளர்களைக் கடத்திச் சென்றனர் என்றும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சியினால் கடத்திச் செல்லப்பட்ட இந்த 38 பேரும் விடுவிக்கப்பட்டனர் என்று நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை அன்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கத்தில் கூறியுள்ளார் அதன் அரசுத் தலைவர் Bola Ahmed Tinubu.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்