தேடுதல்

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்  

தைஃபூன் ஃபங்-வொங் பேரழிவின் தாக்கம் அதிகரிப்பு!

பிலிப்பீன்ஸ் நாடு ஏற்கனவே உலகில் மிகவும் பேரழிவு ஏற்படக்கூடிய நாடாகும், அத்துடன் இது அடிக்கடி காலநிலை தொடர்பான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

நவம்பர் 9,  இஞ்ஞாயிறன்று, பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய தைஃபூன் ஃபங்-வொங்  புயலால் ஏறத்தாழ 17 இலட்சத்திற்கும்  அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தப் புயல் 16 மாநிலங்களில் பரவலான பேரழிவை ஏற்படுத்தியதுடன், 15,000-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் சேதத்தை விளைவித்து, வீடுகள், மற்றும் நலவாழ்வு மையங்களை அழித்தது எனவும்,  பல குழந்தைகள் நோய், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உளவியல் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. .

மேலும் 900-க்கும் மேற்பட்ட பொதுப் பள்ளிகள் தற்காலிக தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், உணவு, தண்ணீர் மற்றும் நலவாழ்வு கருவிகள், அத்துடன் உளவியல் மற்றும் குழந்தை பாதுகாப்பு சேவைகள் உள்ளிட்ட அவசர உயிர்காக்கும் ஆதரவை  அந்நிறுவனம் வழங்கி வருவதாகவும் உரைத்துள்ளது.

பிலிப்பீன்ஸ் நாடு ஏற்கனவே உலகில் மிகவும் பேரழிவு ஏற்படக்கூடிய நாடாகும், அத்துடன் இது அடிக்கடி காலநிலை தொடர்பான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் புயல் கடுமையாகத் தாக்கிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், பொருளாதார உதவிகளை வழங்குவதற்கும் யுனிசெஃப் அமைப்பு அந்நாட்டு அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 நவம்பர் 2025, 14:50