தேடுதல்

குழந்தைகள் குறித்து  யுனிசெஃப் நிறுவனத்தின் எச்சரிக்கை குழந்தைகள் குறித்து யுனிசெஃப் நிறுவனத்தின் எச்சரிக்கை   (AFP or licensors)

குழந்தைகளின் இணையதள பாதுகாப்புக் குறித்து யுனிசெஃப் எச்சரிக்கை!

"வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் மட்டும் குழந்தைகளின் இணையதள பாதுகாப்பை உறுதி செய்யாது" : யுனிசெஃப் நிறுவனம் எச்சரிக்கை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சமூக ஊடகங்களில் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள், கொடுமைப்படுத்துதல், சுரண்டல் மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் போன்ற இணையதள ஆபத்துகளிலிருந்து குழந்தைகளை முழுமையாகப் பாதுகாக்காது என்று யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

டிசம்பர் 12, வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இவ்வாறு கூறியுள்ள யுனிசெஃப் நிறுவனம், பல்வேறு நாட்டு அரசுகள் இதுபோன்ற தடைகளைப் பரிசீலித்து வரும் வேளையில், கல்வி மற்றும் தொடர்புக்காக சமூக ஊடகங்களை நம்பியிருக்கும் ஓரங்கட்டப்பட்ட குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது.

இணையதள பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வயது வரம்புகளை உள்ளடக்கிய ஒரு பரந்த அளவிலான உத்தியை இந்த நிறுவனம் கோரியுள்ள அதேவேளையில், தள வடிவமைப்பு, தனியுரிமை உரிமைகள் மற்றும் சிறந்த உள்ளடக்க மதிப்பீட்டிலும் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 டிசம்பர் 2025, 14:13