தேடுதல்

பாதுகாப்பு பணியில் யுனிசெஃப் நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் யுனிசெஃப் நிறுவன ஊழியர்கள்   (ANSA)

உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுனிசெப் ஆதரவு!

உக்ரைனில் போர் தொடர்வதால் குழந்தைகள் அச்சமற்ற மற்றும் வன்முறையற்ற எதிர்காலத்திற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதில் அந்நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

டிசம்பர் 12, வெள்ளியன்று உக்ரைனில் இடம்பெற்று வரும் போர் நான்காவது ஆண்டை நெருங்கும் நிலையில் 7,25,000 குழந்தைகள் உட்பட 43 இலட்சம் மக்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காக யுனிசெப்  நிறுவனம் 35 கோடி அமெரிக்க டாலர் நிதிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

இந்த நிதி வேண்டுகோள், யுனிசெப் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான மனிதாபிமான நடவடிக்கை 2026 -ஆம் ஆண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

இதுகுறித்து உக்ரைனுக்கான யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி முனிர் மம்மத்ஸாடே அவர்கள், "போரினால் குழந்தைகளின் ஒவ்வொரு அம்சமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இது அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல், 3,120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் உணவு, நலவாழ்வுப் பாதுகாப்பு, கல்வி, தூய்மையான நீர் மற்றும் வன்முறை, சுரண்டலில் இருந்து பாதுகாப்பை வழங்குவதில்  அந்நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

உக்ரைனில் போர் தொடர்வதால் குழந்தைகள் அச்சமற்ற மற்றும் வன்முறையற்ற எதிர்காலத்திற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதில் அந்நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 டிசம்பர் 2025, 14:24