தேடுதல்

ஆன்றோர் வாக்கு ஆன்றோர் வாக்கு  

ஆன்றோர் வாக்கு

அதிகாரத்தை செலுத்த முடியும், அதிகாரத்தை பயன்படுத்த முடியும், அதிகாரத்தை வாழ்ந்து காட்ட முடியும் என்று முயன்றோம் என்றால் கட்டாயமாக அது நமக்கு கைகூடும்.

மேதகு ஆயர் சிங்கராயன்

வாழ்விலே இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஆன்றோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றிருப்பதை இன்று நாம் நினைத்து பார்க்கிறோம். ஜான் எமெரிச் எட்வர்ட் டால்பெர்க்-ஆக்டன் என்று ஒரு எழுத்தாளர் வாழ்வைப் பற்றி இப்படி கூறுகிறார். அதிகாரம் ஊழல் இந்த இரண்டையும் பற்றிய அவர் சிந்தித்துப் பார்க்கிறார். அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் முழு அதிகாரம் முழு ஊழலுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். மேலே எழுந்த வாரியா இதைப்பற்றி  நாம் சிந்தித்து பார்க்கும் போது அதிகாரம் என்பது ஊழலுக்கு இட்டுச் செல்லும் வழியாகத்தான் இருக்க முடியுமா? ஏன் அதிகாரத்தை நல்ல விதத்தில் பயன்படுத்துகின்றவர்கள் இல்லையா? என்றெல்லாம் நாம் கேள்வி கேட்க முடியும். ஆனால் இந்த எழுத்தாளர் ஆழ்ந்த அனுபவத்திற்கு பின் இப்படி கூறியிருக்கிறார். அதிகாரம் ஊழலுக்கு வழிவழுக்கும் அதுவும் முழுமையான அதிகாரம் முழுமையான ஊழலுக்கு வழிவகுக்கும் காரணம் என்ன? அதிகாரத்தை தன்னிடத்திலே கொண்டிருப்பவர்கள் தாம் விரும்பியபடி தன்னிச்சையாக செயல்படுவதாலும் யார் மீது அதிகாரம் செலுத்துகின்றார்களோ அவர்களைப் பற்றியும் அவர்களது நலன்கள் பற்றியும் அக்கறையில்லாமல் செயல்படுவதாலும் அங்கே பலவிதமான ஊழல்களும் சரியில்லாத செயல்பாடுகளும் தோன்றுகின்றன என்பது இன்று நாம் பார்க்கின்ற அன்றாட ஒரு உண்மை என்று அவர் கூறுகிறார்.

முழு அதிகாரம் கிடைத்து விடுகின்ற போது அவருடைய செயல்பாடுகள் முழு ஊழலுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அதிகாரமே வேண்டாம் என்று இருந்துவிட முடியுமா அப்படியும் இருக்க முடியாது. சமுதாயத்திலே ஒரு சில காரியங்களைச் செய்ய அதிகாரம் தேவை. ஆனால் நமது அதிகாரத்தை நல்ல முறையில் பிறரோடு கலந்து ஆலோசித்து பணிகளையும் பகிர்ந்து நாம் வாழ்ந்தோம் என்றால் அதிகாரம் உங்களுக்கு வழி வகுக்க முடியாது. எனவே இதனை ஒரு சவாலாக நாம் ஏற்றுக் கொண்டு ஊழலுக்கு வழிவகுக்காத விதத்திலே அதிகாரத்தை செலுத்த முடியும், அதிகாரத்தை பயன்படுத்த முடியும், அதிகாரத்தை வாழ்ந்து காட்ட முடியும் என்று முயன்றோம் என்றால் கட்டாயமாக அது நமக்கு கைகூடும். அனைவரும் முயன்று பார்ப்போமா?  உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஏப்ரல் 2026, 15:42