நெறி காட்டும் ஆளுமைகள்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.
அறிஞர் மேத்யூ ஹென்றி மேதையின் டைரி குறிப்பு இது. பணப்பையோடு பயணம் செய்து கொண்டிருந்தார் அவர். அப்போது திருடர்கள் அவரை சுற்றிச் சூழ்ந்து சூறையாடிவிட்டு பணப்பையோடு பறந்து விட்டார்கள். படபடப்பாய் வீட்டுக்கு திரும்பினார். விருவிருவென தனது டைரியை எடுத்தார். இப்படி எழுதி வைத்தார். இறைவா உமக்கு நன்றி. நான்கு முறை நன்றி. இதுவரை எவரும் என்னை கொள்ளையடிக்கவில்லை, அதற்காக எனது முதலாவது நன்றி. இதோ இப்போது அவர்கள் என் பணத்தை மட்டும் கொள்ளையடித்துவிட்டு என்னை உயிரோடு விட்டுவிட்டனர். அதற்காக எனது இரண்டாவது நன்றி. பறிபோன அந்தப் பண பையிலே நான் அதிகம் பணம் வைத்திருக்கவில்லை, அதற்காக எனது மூன்றாவது நன்றி. இறைவா இதுவரை நான் யாரையும் கொள்ளை அடிக்காமல் வாழ்க்கை நடத்துகிறேனே, அதற்காக எனது நான்காவது நன்றி. இருளிலும் அருள் தேடல் என்பது இதுதான். பட்டப் பகலிலே பதட்டம் இல்லாமல் தேடுவதைவிட மையிருட்டிலே விட்டதை தேடுவது கொஞ்சம் சவாலானது தான். ஆனால் படு சுவாரஸ்யமானது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்