தேடுதல்

ஆன்றோர் வாக்கு ஆன்றோர் வாக்கு 

ஆன்றோர் வாக்கு

சிந்தித்து செயல்படுவோம்; சிந்தனையே நமது வார்த்தைகளையும் செயல்களையும் வழிநடத்துகிறது.

மேதகு ஆயர் சிங்கராயன்

சிந்திப்போம்… சிறப்பாகச் செயல்படுவோம்!

எழுத்தாளர் Bailey Philips James அவர்கள் ஒரு அழகான கருத்தை நமக்கு முன்வைக்கிறார்: “He most lives, feels noblest, acts the best.” இதன் பொருள்: “சிந்திப்பவனே உண்மையாக வாழ்கிறான்; அவனே மேன்மையானதை உணர்கிறான்; அவனே சிறந்த செயல்களைச் செய்கிறான்.” நண்பர்களே, இந்த ஒரு வாக்கியத்தில் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் உள்ள ஆழமான தொடர்பை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவர் சிந்திக்கும்போதுதான் சரியானதை உணர முடியும்; சரியானதை உணரும்போதுதான் சிறந்த செயல்களைச் செய்ய முடியும். நம்மில் பலர், சில நேரங்களில் தவறான ஒரு செயலைச் செய்துவிட்டு, “நான் யோசிக்காமல் செய்துவிட்டேன்”, அல்லது “நான் யோசிக்காமல் பேசிவிட்டேன்” என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இதிலிருந்தே சிந்தித்து செயல்படுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

நாம் செய்யப்போகும் செயல் சிறியதாக இருந்தாலும் சரி, பெரிய திட்டமாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி நன்றாகச் சிந்தித்துப் பிறகே செயல்பட வேண்டும். ஏனெனில், நமது சிந்தனைகளே நமது வார்த்தைகளையும் செயல்களையும் வழிநடத்துகின்றன. சிந்திப்பவன் வாழ்கிறான்; சிந்திப்பவன் மேன்மையானதை உணர்கிறான்; சிந்திப்பவன் சிறந்த செயல்களைச் செய்கிறான். எனவே, நண்பர்களே, சிந்திப்போம்… செயல்படுவோம்!
சிந்திக்காமல் எதையும் செய்யவோ, பேசவோ மாட்டோம் என்ற உறுதியுடன் வாழ்வோம். மேன்மையான எண்ணங்களோடு, சிறந்த செயல்களைச் செய்து, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஆகஸ்ட் 2026, 14:31